/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடுமலை நகரத்தில் இன்று போக்குவரத்தில் மாற்றம்
/
உடுமலை நகரத்தில் இன்று போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஏப் 24, 2024 10:41 PM
உடுமலை : பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, நகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை நகரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. பொள்ளாச்சி ரோட்டிலுள்ள கோவிலில் இருந்து தேரோட்டம் துவங்கி, தளி ரோடு சந்திப்பு வழியாக குட்டைத்திடல், தலகொண்டம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் பொள்ளாச்சி ரோட்டில் இணைந்து, கோவிலை வந்தடைகிறது.
மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்குவதால், நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், பாலப்பம்பட்டியில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.
இதே போல், திருப்பூர், செஞ்சேரிமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ஏரிப்பாளையம் சர்வீஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையலாம். போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப, மாற்றுப்பாதையில் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

