தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை வரும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள்

கோவை வரும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள்

கோவை வரும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள்


ADDED : ஜூன் 04, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2024 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:கோவை ரயில்வே யார்டில் இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால், கோவை வரும் ரயில்கள் இருகூர் போத்தனுார் வழியாக இயக்கப்படுகின்றன.

திப்ருகர் -- கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஷாலிமார் -- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (22642) 5 ம் தேதி இருகூர் --- போத்தனுார் வழியாக இயக்கப்படுவதால், இந்த ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் செல்லாது. அதற்கு பதிலாக போத்தனுாரில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் -- மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16159), புது தில்லி -- திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (12626) பெங்களூரு -- எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12677) ஆலப்புழா -- தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12678) ரயில்கள் 5 மற்றும் 6ம் தேதிகளில், இருகூர் -- போத்தனுார் வழியாக இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரயில், கோவை ரயில்வே ஸ்டேஷன் செல்லாது.

ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா - - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (16318) 6ம் தேதி -இருகூர் போத்தனுார் வழியாக இயக்கப்படுகிறது.

இதனால், இந்த ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் செல்லாது. அதற்கு பதிலாக போத்தனுாரில் நின்று செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us