/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிறப்பாக செயல்படுங்கள்' மேயருக்கு முதல்வர் அறிவுரை
/
'சிறப்பாக செயல்படுங்கள்' மேயருக்கு முதல்வர் அறிவுரை
'சிறப்பாக செயல்படுங்கள்' மேயருக்கு முதல்வர் அறிவுரை
'சிறப்பாக செயல்படுங்கள்' மேயருக்கு முதல்வர் அறிவுரை
ADDED : ஆக 09, 2024 01:57 AM
கோவை;'சிறப்பாக செயல்படுங்கள்' என, கோவையின் புதிய மேயர் ரங்கநாயகிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கோவை மாநகராட்சியின் ஏழாவது மேயராகவும், இரண்டாவது பெண் மேயராகவும், தி.மு.க.,வைச் சேர்ந்த, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர்கள் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் செங்கோல் வழங்கி, வாழ்த்து கூறினர்.
அமைச்சர் நேரு தலைமையில் மேயர் ரங்கநாயகி, மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர், சென்னை சென்று, முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, 'சிறப்பாக செயல்படுங்கள்' என, புதிய மேயருக்கு, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.