/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; மனு கொடுக்க குவிந்த மக்கள்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; மனு கொடுக்க குவிந்த மக்கள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; மனு கொடுக்க குவிந்த மக்கள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; மனு கொடுக்க குவிந்த மக்கள்
ADDED : ஜூலை 25, 2024 10:48 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
சோமையனூரில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் கார்த்திகேஸ்வரி முகாமை துவக்கி வைத்தார்.
வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன், பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று, தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி வைத்தார். முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள், சிறு தொழில், மருத்துவம், விவசாயம், கால்நடை, காவல் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
மகளிர் உரிமைத்தொகை, கலைஞரின் கனவு இல்லம், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு அதிக அளவு மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.