/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிண்டிகேட் உறுப்பினரானார் ஸ்ரீராமகிருஷ்ணா முதல்வர்
/
சிண்டிகேட் உறுப்பினரானார் ஸ்ரீராமகிருஷ்ணா முதல்வர்
சிண்டிகேட் உறுப்பினரானார் ஸ்ரீராமகிருஷ்ணா முதல்வர்
சிண்டிகேட் உறுப்பினரானார் ஸ்ரீராமகிருஷ்ணா முதல்வர்
ADDED : ஆக 14, 2024 08:58 PM

கோவை : நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் நீண்ட அனுபவம் மிக்கவர்.
இவரை, கோவை பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினராக, தமிழக ஆளுநர் மற்றும் பாரதியார் பல்கலையின் வேந்தர் ரவி, நியமனம் செய்துள்ளார்.
இதன்படி, வரும் 19ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு, பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினராக, சிவக்குமார் பதவி வகிப்பார்.
சிவக்குமாரை, எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை செயல் அலுவலர் ராம்குமார் ஆகியோர் பாராட்டினர். கல்லுாரித்துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.