தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இ.பி.எஸ்.க்கு தெரியும்

இ.பி.எஸ்.க்கு தெரியும்

இ.பி.எஸ்.க்கு தெரியும்


UPDATED : ஜூலை 27, 2026 11:21 PM

ADDED : ஜூலை 27, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 11:21 PM ADDED : ஜூலை 27, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்ரா வீட்டுக்கு வந்திருந்தார் மித்ரா.

டிவியில் அதிமுக செய்தி பார்த்த சித்ரா, ''இ.பி.எஸ். தலைமையில சென்னையில மீட்டிங் நடந்துச்சே...ஏதாவது டீட்டெயில்ஸ் உண்டா...?'' என்றார்.

''வேலுமணி வரலை. வர மாட்டார்னு இ.பி.எஸ்.க்கு தெரியும். அதனால கொங்குல இருந்து போனவங்கள பேச விட்டிருக்காரு. மாவட்டத்துக்கு ஒருத்தர்னு 6 பேர் பேசுனாங்களாம். சிங்கை ராமச்சந்திரனும் பேசியிருக்காரு''.

''அப்புறம் ஏன் கட்சியில இருந்து விலகி அறிக்கை விட்ருக்காரு..?''

''இளைஞர்களுக்கு பொறுப்பு குடுக்கணும்; வசதி இல்லாதவங்களா இருந்தாலும் எலக்சன்ல நிக்க சான்ஸ் குடுக்கணும; காசு வாங்கிட்டு சீட் குடுக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கார். அதுக்கு இ.பி.எஸ். 'ஏம்ப்பா... எம்.பி. எலக்சன்ல டிக்கெட் குடுத்தோமே... காசு வாங்குனமா என்ன?'னு கேட்டாராம். அதோட சைலன்டா உக்காந்துட்டார்னு இ.பி.எஸ். ஆளுங்க சொல்றாங்க,''

''ஓகோ...''

''திமுக, பாஜல இருந்து கூப்ட்ருந்தாலும் ரெண்டுமே இனி தேறாதுனு நினைக்கிறாராம். அதனால அரசியல்ல இருந்து ஒதுங்கி பிசினச பார்க்க போயிருவார்னு இ.பி.எஸ். தரப்புல சொல்றாங்க''

''அது சரிதான். டிவிகேல அவ்ளோ சீக்கிரம் பதவி கிடைக்காது. புதுசா சேர்ற பிரமுகர்கள் எல்லார பத்தியும் உளவு துறை ரிப்போர்ட் வாங்கிதான் முடிவு எடுக்கிறாங்களாம். அப்படித்தான் திமுக ஆட்சியில நடந்த 'லாக்கப் டெத்' பட்டியலை உளவுத்துறைட்ட போட்டு வாங்கினாங்களாம்”.

''எதிர்க்கட்சி அறிக்கைகளுக்கு பதிலடி குடுக்கணும்ல...''

''காமெடி தான் போ. எதிர்க்கட்சி அறிக்கைகள யாரும் படிக்கிறாங்களா, என்ன? கிரவுண்ட் லெவல்ல நடக்கிற மாற்றத்த ஜனங்க பாக்க ஆரமிச்சுட்டாங்க. இனிமே இந்த அறிக்கை பேட்டிலாம் எடுபடாது”

”உண்மைதான். பல மட்டங்கள்ல லஞ்சம் கேக்றது அப்டியே நின்னு போச்சு. ஆனா, கீழ் மட்டத்துக்கு இன்னும் வரல. ேட்டுப்பாளையம் நகராட்சில 2 இன்ஜினியருங்கள்ல, யாரு அதிகமா 'ப' வாங்குறதுனு இன்னும் போட்டியாம். ஒருத்தர் டிரைவர், ஆபீஸ் பாய் மாதிரி கீழ் லெவல் ஆளுங்கள யூஸ் பண்ணி வாங்குறாராம். இன்னொருத்தர் அவரோட சொந்தக்காரங்க பேர்ல ஜிபே அனுப்ப சொல்லி கலெகக்சன் பாக்குறாராம். கான்ட்ராக்டர்ஸ் கடுப்புல இருக்காங்க''

''சாமி உண்டியலையே ஆட்டைய போடுறவங்க, கான்ட்ராக்டர்சை விட்டா வப்பாங்க''

''கோனியம்மன் கோயில் உண்டியல திருடுன விவகாரத்ல, 3 பேர சஸ்பெண்ட் பண்ணுனாங்க.. ஆனா பணம் எண்ற வேலையை சூப்பர்வைஸ் பண்ணுன அதிகாரிய தொடாம விட்டுட்டாங்க''

''மேலிட செல்வாக்கா இருக்கும்..''

''அதே. முன்னால இங்க டி.ஆர்.ஓ.வா இருந்தவர் இப்ப கூடுதல் டிசியா இருக்காராம். அவர் புல் சப்போர்ட்டாம். பாவம், அமைச்சருக்கு இதெல்லாம் தெரியவே சான்ஸ் இல்ல''

''நரசிம்ம அவதாரம் எடுத்த கோயில்லயும் தேங்கா, பழம், நெய்தீபம், அர்ச்சனைக்கு வாங்குற அமவுன்டுக்கு டம்மி பில் குடுத்து காசு கொள்ளையாம்''

''இவங்களாவது பணத்த கொள்ளயடிக்கறாங்க. பேரூர் கோயில்ல தங்க குண்டு திருட்டு போன கேசுல ஜெயிலுக்கு போயி ஜாமின்ல வந்த விவேகம் இல்லாதவரு, சாட்சி சொன்னவங்க மேல இருக்கற கோவத்துல, கோயில்ல கொலை விழும்னு மிரட்டுறாராம். லேடி ஸ்டாப் ஒருத்தர கெட்ட வார்த்தைல அபிஷேகம் பண்றாராம்''

டிவியில் தனியார் பால் விலை உயர்வு பற்றிய செய்தியை பார்த்த சித்ரா, ''நம்மூர் பால் கம்பெனில வண்டிகளுக்கு டெண்டர் விடாம கொட்டேஷன் மட்டும் வாங்கி, தயிர் பாக்கெட் ஏத்தி விக்கறாங்களாம். பாக்கெட்டுக்கு ரெண்டு ரூபா கல்லா கட்டுறதா ஏஜென்டுங்க புலம்புறாங்க''

''பாரதியார் யூனிவர்சிட்டில வர்ற காலேஜ் புரபசருங்க சிலபேரும் நேத்து புலம்பினாங்க''

''என்னவாம்...''

''சில ஆட்டோனாமஸ் காலேஜ்ல அனுமதிச்சத விட அதிகமா அட்மிஷன் போடுறாங்க. காலேஜுக்கே வராத ஸ்டூடன்ட்ஸ் பேர பைனல் இயர்ல சே்த்துக்கறாங்களாம்''

''எப்படி கண்டுபிடிச்சாங்க?''

''கோர்ஸ் முடிச்ச சர்ட்டிபிகேட் வாங்கும்போது கன்ட்ரோலர்கிட்ட குடுக்கற பட்டியல்ல இருந்த வித்தியாசத்த பார்த்து கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த மாதிரி சில காலேஜ்கள்ல பிரின்சிபாலா, ஒருத்தரே 10 வருஷத்துக்கு மேல இருக்காங்களாம். பின்னணிய விசாரிச்சா என்னென்ன கைமாறுச்சுனு தெரியும்னு புரபசர்ஸ் சொல்றாங்க''

''வேலுசாமிக்கு பதவி கைமாறுன மேட்டர்ல மாஜிக்கு ரொம்ப வருத்தம் போல இருக்கு''

''இருக்காதா பின்னே...''

''மாவட்ட செயலாளரா அப்பாயின்ட் கெடச்ச பிறகு, தொகுதி வாரியா கூட்டம் நடத்திட்டு வர்றாரு. தொண்டாமுத்துார்ல மட்டும் நடத்தவே முடியலயாம்''

''நம்மூரு ஆளுங்கட்சி 'பொறுப்பு', நிகழ்ச்சிகளுக்கு லேட்டா வர்றாராம். எல்லாரும் மணிக்கணக்கா காத்துக்கிடக்கறாங்க. கணபதில நடந்த உதவித்தொகை நிகழ்ச்சில, ஸ்டூடன்சை ரெண்டு மணி நேரம் காக்க வச்சிட்டாராம்''

''அன்னுார்ல தவெக நடத்துற எந்த நிகழ்ச்சிக்கும், கட்சில புதுசா சேர்ந்த மத்த கட்சிக்காரங்கள கூப்புடுறதில்லை. அமைச்சர் கமலி எப்பல்லாம் வர்றாங்கன்னும் சொல்றதில்லை. எப்படா நம்மளயும் மதிப்பாங்கன்னு காத்திருக்காங்களாம்''

''செம்மொழி பூங்கா ஊழல் விசாரணை சூடுபிடிக்குது. சீயெம் ஆபீசுல இருந்து ரிப்போர்ட் கேட்ருக்காங்க. ஆபீசர்ஸ்க்கு வயித்த கலக்குதாம். முக்கிய ஆபீசர் 10 நாள் லீவுல போயிட்டாராம். முன்னாள் உயரதிகாரி பேரும் அடிபடுது''

-பேசியவாறே சித்ரா டிவியை ஆப் செய்ய, இருவரும் வெளியே கிளம்பினார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us