/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடர்த்தியான தென்னங்கன்றுகளை தேர்வு செய்யுங்கள்
/
அடர்த்தியான தென்னங்கன்றுகளை தேர்வு செய்யுங்கள்
ADDED : ஆக 13, 2024 01:25 AM

சூலுார்;சூலுார் வட்டார தோட்டக்கலை சார்பில், தென்னை வளர்ச்சி வாரியத்தின், தென்னை கள சார்பு பயிற்சி, கரவழி மாதப்பூரில் நடந்தது. தென்னை சாகுபடி, கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து மேலாண்மை, தொழில்நுட்பங்கள், பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானி தவப்பிரகாசம் பேசியதாவது:
தென்னங்கன்றுகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆறு இலைகள் கொண்ட கன்றுகளையும், அடர்த்தியான கன்றுகளையும் தேர்வு செய்தால் நல்ல பலன் அளிக்கும். உரங்களை மேற்புறமாக இடுவதை தவிர்த்து, மண் போட்டும் மூட வேண்டும். தென்னை டானிக்கை வருடத்துக்கு இரு முறை அளிக்க வேண்டும்.
40 மி.லி., டானிக்குடன், 160 மி.லி., தண்ணீர் கலந்து வேரில் கட்டினால், நுண்ணூட்ட சத்துக்கள் மரத்துக்கு கிடைக்கும். இரவில் விளக்கு பொறிகளை வைத்தால், அவை கவர்ந்து இழுக்கப்படும். அதன்பின் அவற்றை அழிக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

