/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு சர்க்குலர் ரயில் அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
/
கோவைக்கு சர்க்குலர் ரயில் அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
கோவைக்கு சர்க்குலர் ரயில் அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
கோவைக்கு சர்க்குலர் ரயில் அரசுக்கு 'கொடிசியா' வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 12:29 AM

கோவை;கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா), 55வது பொதுக்குழு கூட்டம், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்தது.
அதில், 2024-26ம் ஆண்டுக்கு புதிய தலைவராக, சூக் ஷ்மா டைனமிக்ஸ் பிரைவேட் லிமிடெட் கார்த்தி கேயன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றார்.
இவர், கொடிசியாவின், 29வது தலைவர். உப தலைவர்களாக கோவை பைன்கோட் பிரைவேட் லிமிடெட் கிருஷ்ணராஜ், ரங்கவேல் இண்டஸ்ட்ரீஸ் ரங்கசாமி, மெட்ரோ மெட்டல் பினிஷர்ஸ் சசிகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.
கவுரவ செயலாளராக கஜேந்திரா ஏஜன்சீஸ் யுவராஜ், கவுரவ இணை செயலாளராக சித்தா ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் சஞ்சீவி குமார், கவுரவ பொருளாளராக யூனிகான் இன்ஜினியர்ஸ் பொன்ராம் மற்றும் கவுரவ இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றனர்.
அரசுகளுக்கு கோரிக்கைகள்
இதன்பின், மத்திய - மாநில அரசுகள் செய்து தர வேண்டிய கோரிக்கைகளை முன்னெடுத்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். அதில், கோவைக்கான வரைவு மாஸ்டர் பிளானில், தொழில்துறையினருக்கு பயனளிக்கும் வகையிலான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். கிழக்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
கூடுதலாக, கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலிக்கு 'புல்லட் ரயில்' இயக்க வேண்டும், கோவையின் தேவைக்கேற்ப புறநகரை சுற்றி வரும் வகையில், சர்க்குலர் ரயில் சேவை அளிக்க வேண்டும். தொழில்துறையினர் வெளிநாடுகளுக்கு சென்று வரும் வகையில், விமான நிலைய உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். கோவையில் உள்ள 'செயில்' யார்டை மீண்டும் திறக்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.