/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடப்பட்ட அங்கன்வாடி மையம் கலெக்டரிடம் மக்கள் முறையீடு
/
மூடப்பட்ட அங்கன்வாடி மையம் கலெக்டரிடம் மக்கள் முறையீடு
மூடப்பட்ட அங்கன்வாடி மையம் கலெக்டரிடம் மக்கள் முறையீடு
மூடப்பட்ட அங்கன்வாடி மையம் கலெக்டரிடம் மக்கள் முறையீடு
ADDED : ஜூன் 25, 2024 08:41 PM
அன்னுார்;ஆலபாளையத்தில் இழுத்து மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கணுவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குழந்தைகள் நல மையம் செயல்பட்டு வந்தது. இம்மையத்தில் போதிய குழந்தைகள் இல்லை என்று கூறி கடந்த ஆண்டு இழுத்து மூடப்பட்டது.
இதுகுறித்து மக்கள் நல சமூக ஆர்வலர் அறக்கட்டளை சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், 'தற்போது அந்த கிராமத்தில் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலுள்ள 18 குழந்தைகள் உள்ளன. இந்த பட்டியல் அன்னூர் வட்டார குழந்தைகள் நல மைய திட்ட அலுவலரிடமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் அங்கன்வாடி மையம் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகின்றன. 4 கி.மீ., தொலைவிற்கு சென்று தான் வேறு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டும். எனவே, இப்பகுதியில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் நலம் கருதி மூடப்பட்ட குழந்தைகள் நல மையத்தை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.