/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - பரவுனி சிறப்பு ரயில் நீட்டிப்பு
/
கோவை - பரவுனி சிறப்பு ரயில் நீட்டிப்பு
ADDED : செப் 10, 2024 01:58 AM
கோவை;கோவை, பீஹார் மாநிலம் பரவுனி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை - -பரவுனி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059) வரும் நவ., 26ம் தேதி வரை, வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 11:50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, பரவுனியை வியாழக்கிழமை மதியம் 2:30 மணிக்குச் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (எண்:06060) வரும் நவ., 29ம் தேதி வரை, வெள்ளிதோறும் இரவு 11:45 மணிக்கு, பரவுனியில் இருந்து புறப்பட்டு, கோவையை திங்கள்தோறும் மாலை 3:45 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை,காட்பாடி, பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த அறிவிப்பை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

