/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைக்கிறார் கோவை கலெக்டர்
/
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைக்கிறார் கோவை கலெக்டர்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைக்கிறார் கோவை கலெக்டர்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைக்கிறார் கோவை கலெக்டர்
ADDED : ஜூலை 03, 2024 09:39 PM
கோவை : ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (பழங்குடியினருக்கானது) 2024ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 15 வரை நடைபெறும்.
இது குறித்து, கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரீசியன், பிட்டர், வயர்மென் ஆகிய பயிற்சி இரண்டாண்டு காலத்துக்கும், வெல்டர் ஓராண்டு காலத்துக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிகளுக்கான நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
காலியாக உள்ள இடங்களுக்கு, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். வயர்மேன் மற்றும் வெல்டர் தொழிற்பிரிவுகளுக்கு கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சியும், எலக்ட்ரீசியன், பிட்டர் மற்றும் எம்.எம்.வி., தொழிற்பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரை, மகளிர்க்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ், ஒவ்வொரு மாத வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை 750 ரூபாயும், விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் மற்றும் சைக்கிள் ஆகியவை வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த, அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
பயிற்சியாளர்களுக்கு விடுதியின் காலியிடங்களைப் பொறுத்து, உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும். நேரடி சேர்க்கைக்கு குறைந்த நாட்களே உள்ளதால், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். விபரங்களுக்கு, 94990 55693, 94990 55694 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.