/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., பெண் தொண்டர்களிடம் கோவை போலீசார் மனித உரிமை மீறல் நடவடிக்கை கோருகிறது பா.ஜ.,
/
பா.ஜ., பெண் தொண்டர்களிடம் கோவை போலீசார் மனித உரிமை மீறல் நடவடிக்கை கோருகிறது பா.ஜ.,
பா.ஜ., பெண் தொண்டர்களிடம் கோவை போலீசார் மனித உரிமை மீறல் நடவடிக்கை கோருகிறது பா.ஜ.,
பா.ஜ., பெண் தொண்டர்களிடம் கோவை போலீசார் மனித உரிமை மீறல் நடவடிக்கை கோருகிறது பா.ஜ.,
ADDED : ஜூலை 04, 2024 05:01 AM
கோவை : கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து, ஒருதலைபட்சமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பா.ஜ., பெண் தொண்டர்களிடம் மனித உரிமை மீறலில் எடுபட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பா.ஜ., சார்பில் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் அளித்த மனு:
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விஷச்சாராய விற்பனையை தடுக்காத தமிழக அரசை கண்டித்து கடந்த, 22ம் தேதி செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம்.
முந்தைய நாள் அதற்கான அனுமதிக்காக, ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தபோது, 'அனுமதி இல்லை' என, வாய்மொழியாக தெரிவித்தார். இதுகுறித்து விவாதிக்க வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூடியிருந்தோம்.
இன்ஸ்பெக்டர் எழுத்துப்பூர்வமாக மறுப்பு கடிதம் கொடுக்காததால், ஆர்ப்பாட்டத்துக்கு செல்ல தயாரானபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டோம்.
ஆனால், 24ம் தேதி அதே இடத்தில் அ.தி.மு.க.,வினரும், மறுநாள் தே.மு.தி.க.,வினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், எங்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக அனுமதி மறுக்கப்பட்டது. எங்களை கைது செய்யும்போது போதிய பெண் போலீசார் இல்லாமல் பெண் தொண்டர்களை, ஆண் போலீசார் இழுத்து வாகனத்தில் அடைத்து சென்றனர். இதனால், பெண்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது; போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர்.
தற்போது வரை ஆர்ப்பாட்டத்துக்கு, அனுமதி மறுப்பு கடிதம் கொடுக்காமல், ஏழு நாட்களுக்கு மேலாக போலீசார் எங்களை அலைக்கழிக்கின்றனர். எனவே, ஒருதலைபட்சமாக செயல்பட்ட ரேஸ்கோர்ஸ், காட்டூர் போலீசார் மீதும், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.