/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் கோவை மாணவி
/
மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் கோவை மாணவி
மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் கோவை மாணவி
மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் கோவை மாணவி
ADDED : செப் 04, 2024 12:29 AM

கோவை;வெள்ளகோவிலில் நடந்த மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில், கோவை பள்ளி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கொங்குநாடு ரைபிள் கிளப் சார்பில், 50வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி, வெள்ளகோவில், லக்கமநாயக்கன்பட்டி ஆண்டிபாளையத்தில் நடந்தது. டிராப், டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய மூன்று பிரிவுகளில் நடந்த போட்டிகளில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ட்ராப் சூட்டிங் பிரிவில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள என்.ஆர்., எனப்படும் 'நேஷனல் ரூல்ஸ்' போட்டியில் பங்கேற்ற, கோவை எஸ்.எஸ்.வி.எம்., எக்சலன்ஸ் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி இனியா தேன்மொழி, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் வாயிலாக, ஐதராபாத்தில் விரைவில் நடக்கவுள்ள தென்மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார்.