/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்டம் ரிசல்ட்டில் கணினி அறிவியல் முன்னிலை
/
சென்டம் ரிசல்ட்டில் கணினி அறிவியல் முன்னிலை
ADDED : மே 15, 2024 12:51 AM
கோவை;கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் கணினிஅறிவியல் பாடத்தில் 364 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இப்பாடத்தில், தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.
கோவை மாவட்டத்தில், பிளஸ் 1 வகுப்பில் பாடவாரியான தேர்ச்சி முடிவுகளில் கணினி அறிவியலில் 364 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.
பொருளாதாரத்தில் 91 பேரும், வணிகவியலில் 61 பேரும், இயற்பியலில் 47 பேரும், கணக்கு மற்றும் கணக்குப் பதிவியலில் 37 பேரும், மொழிப் பாடத்தில் 36 பேரும், வேதியியலில் 17 பேரும் உள்ளிட்ட பிற பாடங்களிலும் மொத்தம் ஆயிரத்து 323 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
137 பள்ளிகள் சென்டம்: கோவை மாவட்டத்தில் 478 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர்.
இதில், 12 அரசுப் பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள், 119 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 137 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

