/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாம் டிவிஷன் லீக்:கோவை காம்ராட்ஸ் வெற்றி
/
மூன்றாம் டிவிஷன் லீக்:கோவை காம்ராட்ஸ் வெற்றி
ADDED : ஜூன் 21, 2024 12:46 AM
கோவை:மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் கோவை காம்ராட்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 'என். தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் கோப்பைக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கோவை காம்ராட்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஜாலி ரோவர்ஸ் அணி 49.3 ஓவர்களில் 158 ரன்கள் சேர்த்தது. அணிக்காக பிரியதர்ஷன் (56*) அரைசதம் விளாசினார்.
அடுத்து விளையாடிய கோவை காம்ராட்ஸ் அணியின் ஜான் பேப்டிஸ்ட் (50) அரைசதம் அடித்தார். ராஜ் குமார் (33) பொறுப்பாக விளையாடினார். கோவை காம்ராட்ஸ் அணி 34.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.