/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரைகள் பறிமுதல்; இளம்பெண் உட்பட இருவர் கைது
/
போதை மாத்திரைகள் பறிமுதல்; இளம்பெண் உட்பட இருவர் கைது
போதை மாத்திரைகள் பறிமுதல்; இளம்பெண் உட்பட இருவர் கைது
போதை மாத்திரைகள் பறிமுதல்; இளம்பெண் உட்பட இருவர் கைது
ADDED : ஆக 04, 2024 05:37 AM
போத்தனூர் : கோவையில், ஈச்சனாரி மற்றும் கற்றுப்பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைக்கு பயன்படும் மாத்திரைகள் விற்பனை அதிகளவு நடக்கிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடையே இப்பழக்கம் அதிகமாக உள்ளது.
சுந்தராபுரம் அடுத்து சத்யமூர்த்தி நகரில் வசிக்கும் ஒருவர், மாத்திரை விற்பனையில் ஈடுபடுவது சுந்தராபுரம் போலீசாருக்கு தெரிந்தது. இன்ஸ்பெக்டர் ரவி அக்குறிப்பிட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டார்.
நேற்று முன்தினம், இப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கூரியர் நிறுவனத்திலிருந்து பார்சல் ஒன்றை வாங்கிச் சென்றார். போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
வீட்டினுள் வைத்து பார்சலை பிரித்தபோது, போதைக்கு பயன்படுத்தும் நைட்ரோசன் ஐந்து மாத்திரைகள், டெபன்டா டோல் ஹைட்ரோகுளோரைடு, 100 மி.கி., மாத்திரைகள், 500, இருப்பது தெரிந்தது.
மேலும் அறையில், 150 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இவற்றுடன், ஒரு ஸ்கூட்டர், மொபைல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், பட்டதாரியான ஷாமிளா, 27வை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மாத்திரைகளை குஜராத்திலிருந்து வரவழைத்தது தெரிந்தது.
மாத்திரைகள் வாங்க வந்த அவரது ஆண் நண்பரான குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2வை சேர்ந்த சிஜு, 25 என்பவரையும் கைது செய்தனர்.