/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வழிப் பாதையில் கட்டுமான பணி தாலுகா அலுவலகத்தில் மக்கள் புகார்
/
நீர்வழிப் பாதையில் கட்டுமான பணி தாலுகா அலுவலகத்தில் மக்கள் புகார்
நீர்வழிப் பாதையில் கட்டுமான பணி தாலுகா அலுவலகத்தில் மக்கள் புகார்
நீர்வழிப் பாதையில் கட்டுமான பணி தாலுகா அலுவலகத்தில் மக்கள் புகார்
ADDED : செப் 07, 2024 02:40 AM
அன்னுார்;மழைநீர் செல்லும் பாதையில், கட்டுமான பணி செய்ய, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பசூர் ஊராட்சியைச் சேர்ந்தது அம்மா செட்டிபுதுார். இங்கு தனியார் நிறுவனத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
'சுற்றுச்சுவர் கட்டும் பணி மழை நீர் செல்லும் பள்ளத்தில் நடக்கிறது. இதனால் மழைநீர் செல்வது பாதிக்கப்படும். இங்கு குறுகலான பாதையை ஒட்டி, சுற்றுச்சுவர் கட்டுவதால், இங்கு இயங்கி வரும் மினி பஸ் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுச்சுவரை நான்கு அடி உள்ளே தள்ளி கட்ட வேண்டும்' என கோரி, புதுப்பாளையம் மற்றும் அம்மா செட்டிபுதூர் மக்கள் அங்கு குவிந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
எஸ்.ஐ., கனகராஜ், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ரேனிஸ் ஆகியோர் அங்கு பொதுமக்களிடம் புகார் குறித்து விசாரித்தனர். இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அன்னுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, பொது பாதைக்கு இடையூறு இல்லாமல் சுற்றுச்சுவர் கட்ட தொழில் நிறுவனத்திற்கு அறிவுறுத்தும்படி கோரினர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.