/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி பகுதியில் தொடர் மழை
/
பொள்ளாச்சி பகுதியில் தொடர் மழை
ADDED : மே 23, 2024 11:25 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வால்பாறையில், 115 மி.மீ., மழை பதிவாகியது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து தொடர் மழை பெய்து வருகிறது. காலையில், வெயில் அடித்தாலும், மதியத்துக்கு மேல், சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்கிறது.
இதனால், உஷ்ணம் தணிந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் அதிக பட்சமாக வால்பாறையில், 115 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மழையளவு: (மி.மீ.,)
சோலையாறு - 37, பரம்பிக்குளம் - 17, ஆழியாறு -20, திருமூர்த்தி - 5, அமராவதி - 29, மேல்நீராறு - 78, கீழ் நீராறு - 67, காடம்பாறை - 54.4, சர்க்கார்பதி - 11, வேட்டைக்காரன்புதுார் - 6.4, மணக்கடவு - 10, துாணக்கடவு - 23, பெருவாரிப்பள்ளம் - 26, அப்பர் ஆழியாறு - 7, நவமலை -9, பொள்ளாச்சி - 45, நல்லாறு - 30, நெகமம் - 10, சுல்தான்பேட்டை - 29, பொங்களூர் - 45, உப்பாறு - 11, பல்லடம் - 57, பெதப்பம்பட்டி - 26 என மழையளவு பதிவாகியது.