/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'கார்ப்பரேட் பஜார்'
/
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'கார்ப்பரேட் பஜார்'
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'கார்ப்பரேட் பஜார்'
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'கார்ப்பரேட் பஜார்'
ADDED : பிப் 21, 2025 10:55 PM

பொள்ளாச்சி; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில், 'கார்ப்பரேட் பஜார்' என்ற தலைப்பில், பொள்ளாச்சி வி.வி.டி.என்., டெக்னாலஜி வளாகத்தில் கண்காட்சி நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில், சுய உதவிக்குழு பெண்கள் தயாரித்த தனித்துவமான தயாரிப்பு, கைவினை பொருட்கள், உடைகள், பலவகையான உணவுப்பொருட்கள், சேலைகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் என, பலவகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதை பார்வையிட்ட மாணவர்கள், பொதுமக்கள், விரும்பிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.