/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தனியார் பள்ளிக்கு மாநகராட்சி நோட்டீஸ்
/
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தனியார் பள்ளிக்கு மாநகராட்சி நோட்டீஸ்
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தனியார் பள்ளிக்கு மாநகராட்சி நோட்டீஸ்
ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தனியார் பள்ளிக்கு மாநகராட்சி நோட்டீஸ்
ADDED : ஜூலை 23, 2024 09:06 PM
போத்தனூர்;ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு, சுந்தராபுரம் அருகே தனியார் பள்ளிக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுளளது.
சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையில், க.ச. எண் 92 பகுதி, 93 பகுதி மற்றும் 94 ஆகியவற்றில் அஷ்டலட்சுமி நகர் பகுதி உள்ளது.
1983ல் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் வாயிலாக 117.35 சென்ட் பரப்பிலான இடம் பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்து பஸ் மற்றும் சைக்கிள் நிறுத்த ஷெட் அமைத்து, பயன்படுத்தி வருகிறது. இவ்விடத்தை மீட்க, அப்பகுதி குடியிருப்போர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் கடந்த, 12-ம் தேதி பள்ளியின் தாளாளருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், ஷெட் அமைத்து பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக, ஆக்கிரமிப்பு செய்துள்ளீர்கள். இந்த அறிவிப்பு கிடைத்த ஏழு நாட்களுக்குள், ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில் மறு அறிவிப்பின்றி சட்டப்படி நடவடிக்கை, தொடர்ந்து ஒன்று முதல் மூன்றாண்டுகள் வரையான சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை வசூலிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 14 கோடி ரூபாயாகும்.

