/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு குறுமைய செஸ் போட்டியில் அசத்தல்
/
கிழக்கு குறுமைய செஸ் போட்டியில் அசத்தல்
ADDED : ஆக 02, 2024 05:55 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேற்கு, கிழக்கு, கோட்டூர் மற்றும் மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கப்பட்டுநடைபெற்று வருகின்றன. இதில்,நேற்று கிழக்கு குறுமைய அளவிலான செஸ் போட்டி, பொள்ளாச்சி சிறுகளந்தை விக்னேஸ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
போட்டியை, பள்ளி தாளாளளர் சரோஜினி, கிழக்கு குறுமைய செயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
11 வயது, 14, 17 மற்றும், 19 வயது பிரிவு என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆறு ரவுண்டுகளாக போட்டிகள் நடைபெற்றன. அதில், மாணவர்கள், போட்டியாளர்களை வீழ்த்த ஆர்வம் காட்டினர். முழுத்திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களுக்குஉரிய ஆலோசனைகளை வழங்கினர்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, இன்று கேரம் போட்டிகள் நடக்கின்றன.