ADDED : ஆக 09, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
திருட முயன்ற பெண் கைது வடவள்ளியை சேர்ந்தவர் முரளி. அருகில் உள்ள இவரது மாமியார் வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த தேவிகா, 40 அடிக்கடி வந்து சென்றார். 7ம் தேதி மாமியார் வீட்டுக்கு வந்த தேவிகா, டேபிள் மேல் இருந்த 2 பவுன் நகையை திருட முயன்றார். இதை பார்த்த முரளி விசாரித்த போது பயந்து ஓடியுள்ளார். புகாரின் பேரில் தேவிகாவை போலீசார் கைது செய்தனர்.
சோதனையில் 32 பேர் கைது மாநகரில் போதைப்பொருள் விற்பனை செய்த பிரிவின் கீழ், 14 வழக்குகளில் 14 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனை பிரிவின் கீழ், 6 வழக்குகளில் 12 பேரை கைது செய்தனர். சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை பிரிவின் கீழ், ஐந்து வழக்குகளில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்படி ஒரே நாளில், 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
