/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர்ப் பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்கு
/
பயிர்ப் பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்கு
ADDED : பிப் 26, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, வேளாண் பல்கலை, பயிர் பாதுகாப்பு மையம் சார்பில், நான்கு நாள் உலகளாவிய பயிர்ப் பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த 460 விஞ்ஞானிகள், இளநிலை ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்று 9 வகையான தலைப்புகளின் கீழ் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
நிறைவு விழாவுக்கு, தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''விவசாயிகள் அனைத்து தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து சாகுபடி செய்யும்போது, விவசாயிகள் செலவைக் குறைத்து அதிக லாபம் பெறலாம்,'' என்றார்.

