/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எச்., நுழைவுவாயில் அருகில் வாகனங்கள் நிறுத்துவதால் பாதிப்பு
/
ஜி.எச்., நுழைவுவாயில் அருகில் வாகனங்கள் நிறுத்துவதால் பாதிப்பு
ஜி.எச்., நுழைவுவாயில் அருகில் வாகனங்கள் நிறுத்துவதால் பாதிப்பு
ஜி.எச்., நுழைவுவாயில் அருகில் வாகனங்கள் நிறுத்துவதால் பாதிப்பு
ADDED : செப் 11, 2024 10:26 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, தலைமை அரசு மருத்துவமனையின் இரு நுழைவுவாயில்கள் அருகில், வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும், அதிகப்படியான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
உள்நோயாளிகளை பார்ப்பதற்காக பிற பகுதிகளில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள் வந்து செல்கின்றனர். இதனால், மருத்துவமனை வளாகம், எப்போதும் பரப்பரப்புடன் காணப்படுகிறது.
அதேநேரம், மருத்துவமனை நுழைவுவாயில் முன், அதிகப்படியான ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. நடைபாதையை ஆக்கிரமித்து, தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்பட்டும், ரோட்டை ஒட்டி வாகனங்களும் நிறுத்தப்படுகிறது.
மேலும், கடைவீதி வழியாக செல்ல முற்படும் இலகுரக வாகனங்கள், அங்கு, திரும்பி செல்வதற்காக திடீரென நிறுத்தப்படுவதால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நோயாளிகள் அழைத்து வரப்படும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனை வளாகத்திற்குள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'மருத்துவமனையில் இரு நுழைவுவாயில்களை ஒட்டி, வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். அவசர தேவைக்காக செல்லும் ஆம்புலன்ஸ், மருத்துவ பணியாளர்கள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.