/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்சலில் அனுப்பிய கறிவேப்பிலை விதை சேதம்: இழப்பீடு தர உத்தரவு
/
பார்சலில் அனுப்பிய கறிவேப்பிலை விதை சேதம்: இழப்பீடு தர உத்தரவு
பார்சலில் அனுப்பிய கறிவேப்பிலை விதை சேதம்: இழப்பீடு தர உத்தரவு
பார்சலில் அனுப்பிய கறிவேப்பிலை விதை சேதம்: இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஏப் 23, 2024 10:33 PM
கோவை : பார்சலில் அனுப்பிய கறிவேப்பிலை விதை சேதம் அடைந்ததால், பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேரம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி. இவர், காஞ்சிபுரத்திற்கு கடந்த 2023, செப்., 9ல், கே.பி.என்., ஸ்பீடு பார்சல் சர்வீஸ் வாயிலாக, 15 கிலோ கறிவேப்பிலை விதை அனுப்பினார்.
அதன் மொத்த மதிப்பு, 7,500 ரூபாய். பார்சல் சேவை கட்டணமாக, 310 ரூபாய் செலுத்தினார். ஆனால், குறிப்பிட்ட நாளில் டெலிவரி கொடுக்காததால், கறிவேப்பிலை விதை முழுவதும் சேதம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட செல்வி, இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், சரக்கின் மதிப்பு தொகை, 7,500 ரூபாய், பார்சலுக்கு செலுத்திய கட்டணம், 310 ரூபாய் திருப்பி வழங்க வேண்டும்.
அத்துடன் மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு தொகை, 5,000 ரூபாய், மனுதாரருக்கு வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.