/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்புகளில் தீ பொருட்கள் சேதம்
/
குடியிருப்புகளில் தீ பொருட்கள் சேதம்
ADDED : ஏப் 11, 2024 11:51 PM
வால்பாறை;வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
வால்பாறை அடுத்துள்ள, நல்லகாத்து எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில் உள்ள ஒரு வீட்டில், எதிர்பாராதவிதமாக தீ பற்றி எரிந்தது. அங்கிருந்து, அடுத்தடுத்த வீடுகளில் தீ மளமளவென பரவியது.
இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், ஐந்து வீடுகளில் தீ பரவியது. இதில், வீட்டில் இருந்த, டிவி, பீரோ, ஆடைகள் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் எரிந்து நாசமாயின.
அப்போது, வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

