/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் கிணற்றில் இறந்து மிதந்த மீன்கள்: கழிவுநீர் கலப்பால் பாதிப்பு
/
கோவில் கிணற்றில் இறந்து மிதந்த மீன்கள்: கழிவுநீர் கலப்பால் பாதிப்பு
கோவில் கிணற்றில் இறந்து மிதந்த மீன்கள்: கழிவுநீர் கலப்பால் பாதிப்பு
கோவில் கிணற்றில் இறந்து மிதந்த மீன்கள்: கழிவுநீர் கலப்பால் பாதிப்பு
ADDED : ஜூன் 11, 2024 11:53 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, அன்சாரி வீதியில் சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள கிணற்று நீர் கோவிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கிணற்றில் இருந்த மீன்கள் இறந்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள கிணறு, சுற்றியுள்ள பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், குடலுருவி மாரியம்மன் கோவில் சந்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து அதிகளவு கழிவுநீர் வெளியேறுகிறது. இது கிணற்றில் கலப்பதால் நீர் மாசடைந்தது.
இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, கிணற்றை சுற்றிலும் கான்கிரீட் கட்டப்பட்டது; கடந்த, 15 நாட்களுக்கு முன், கழிவுநீர் கலந்த நீர் கிணற்றில் இருந்து வெளியேற்றப்பட்டு, இறந்த மீன்களும் அகற்றப்பட்டன.
இனி இந்த பிரச்னை ஏற்படாது என நினைத்த நிலையில், மீண்டும் கழிவுநீர் கலப்பதால் கிணற்றில் விடப்பட்ட அனைத்து மீன்களும் இறந்து கடும் துர்நாற்றம் வீசுகின்றன. கிணற்று நீரை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணற்றை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால், பயனாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

