/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் குளத்தில் நீர்வழிப்பாதை கண்டறிய முடிவு
/
அன்னுார் குளத்தில் நீர்வழிப்பாதை கண்டறிய முடிவு
ADDED : ஜூலை 02, 2024 02:35 AM
அன்னுார்;அன்னுாரில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 119 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது.
இந்த குளத்தில் தன்னார்வலர்கள் கடந்த 99 வாரங்களாக சீரமைப்பு பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் குளத்தில் பராமரிப்பு பணியை தீவிரப்படுத்தவும், வருகிற 7ம் தேதி 100வது வார களப்பணி விழா நடத்தவும், ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் அன்னுாரில் நடந்தது. கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், குளத்தில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதற்கு திட்ட அறிக்கை தயாரித்தல், குளத்திற்கு எங்கெங்கு நீர்வழிப் பாதை உள்ளது என்பதை கண்டறிதல், டிரோன் வாயிலாக குளத்தை முழுமையாக சர்வே செய்தல், குளத்தில் உள்ள நீரை ஆய்வகத்தில் பரிசோதித்தல், அத்திக்கடவு நீர் கட்டுப்பாட்டு வால்வு அமைத்தல் ஆகிய பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.