/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொன்மலையை காக்க போராட்டம் நடத்த முடிவு
/
பொன்மலையை காக்க போராட்டம் நடத்த முடிவு
ADDED : பிப் 21, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவில், பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் குறித்து, ஹிந்து முன்னணி சார்பில் கூட்டம் நடந்தது.
கிணத்துக்கடவில், கோவை தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணியினர் சார்பில், பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோரி 'பொன்மலையை காப்போம்' என்ற தலைப்பில், முருக பக்தர்கள் ஒன்றிணைந்து அறப்போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும், இக்கோவிலில் சில ஆண்டுகளாக தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் தொடர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை மற்றும் அமைப்பினர், முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.