/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்ட் ஆபீசில் சேவை குறைபாடு: முதியவருக்கு இழப்பீடு
/
போஸ்ட் ஆபீசில் சேவை குறைபாடு: முதியவருக்கு இழப்பீடு
போஸ்ட் ஆபீசில் சேவை குறைபாடு: முதியவருக்கு இழப்பீடு
போஸ்ட் ஆபீசில் சேவை குறைபாடு: முதியவருக்கு இழப்பீடு
ADDED : ஏப் 27, 2024 01:49 AM
கோவை,:கோவை, வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், மூத்த குடிமகன். 2022, அக்., 21 காலை 10:30 மணிக்கு மணியார்டர் செய்வதற்காக, சென்னை, காரப்பாக்கம் தபால் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, கணினி பிரதான சர்வரில், தொழில்நுட்ப பிரச்னை இருப்பதால், அருகிலுள்ள துரைப்பாக்கம் அல்லது சோழிங்கநல்லுார் தபால் அலுவலகத்திற்கு செல்லுமாறு தெரிவித்தனர்.
புகார் புக் கேட்ட போது, கொடுக்க மறுத்தனர். இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார் அளித்ததைத் தொடர்ந்து, காலை 11:25 மணிக்கு மணியார்டர் பதிவு செய்தனர். ஆனால் ரசீதில் பதிவு நேரம் குறிப்பிடவில்லை. கடும் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர், இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையின்போது, கணினியில் சர்வர் பிரச்னை ஏற்படவில்லை என்றும், தபால் ஊழியர் தாமதம் செய்ததும் தெரிந்தது. விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'தபால் ஊழியர் சேவை குறைபாடு செய்துள்ளதால் மனுதாரருக்கு இழப்பீடாக 3,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

