/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்வுக்கு தாமதம் அனுமதி மறுப்பு
/
தேர்வுக்கு தாமதம் அனுமதி மறுப்பு
ADDED : ஜூன் 09, 2024 11:54 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பகவதிபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், தாமதமாக குரூப் 4 தேர்வுக்கு வந்ததால், தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று குரூப் 4 தேர்வு நடந்தது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், கிணத்துக்கடவு, பகவதிபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், குரூப் 4 தேர்வு எழுத, 2 நிமிடம் தாமதமாக வந்ததால், 20க்கும் மேற்பட்டவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதே போன்று பொள்ளாச்சி, பூசாரிபட்டியில் தனியார் கல்லுாரியிலும், தாமதமாக வந்த, 20 நபர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்வுக்கு சென்றவர்கள் கூறுகையில், '2 நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தோம். அதற்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. கூடுதல் அவகாசமாக 5 நிமிடம் ஒதுக்கியிருக்கலாம். மேலும், மழை காரணமாகவே தாமதமானது' என்றனர்.

