/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் பருவத்தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்
/
பாரதியார் பல்கலையில் பருவத்தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்
பாரதியார் பல்கலையில் பருவத்தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்
பாரதியார் பல்கலையில் பருவத்தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்
ADDED : ஏப் 25, 2024 06:22 AM
கோவை : பாரதியார் பல்கலையின் கீழ், பருவத்தேர்வுகளுக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை என, முதல்வர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது.
வழக்கமாக, பருவத்தேர்வுகள் ஏப்., இரண்டாம் வாரத்தில் துவங்கி இறுதியில் முடிக்கப்படும். மே 1ம் தேதி முதல் ஜூன் முதல் வாரம் வரை, கோடை விடுமுறை அளிக்கப்படும். நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் முன்னிட்டு, தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
தன்னாட்சி கல்லுாரிகளில் முன்கூட்டியே திட்டமிட்டு, தேர்தல் முடிந்தவுடனேயே தேர்வுகள் துவக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, அரசு கலை கல்லுாரியில் இன்று முதல் தேர்வுகள் துவங்குகின்றன. தன்னாட்சி இன்றி, பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளுக்கு தேர்வு அட்டவணையே இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறுகையில், 'பாரதியார் பல்கலையில் போதிய திட்டமிடல் இல்லை.
பருவத்தேர்வுகளுக்கான தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. மே 2ம் வாரத்தில் தேர்வு துவங்கவுள்ளதாக வாய்மொழி தகவல் வெளியாகியுள்ளது.
மே 2ம் வாரத்தில் தேர்வுகள் துவக்கினால், ஜூன் முதல் வாரம் வரை நடைபெறும். அடுத்த கல்வியாண்டு சேர்க்கை நடத்துவதிலும், மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்வதிலும் தேவையற்ற காலதாமதம் ஏற்படும். பல்கலை நிர்வாகம் இதனை முன்பே திட்டமிட்டு இருக்கவேண்டும்' என்றனர்.

