ADDED : ஜூன் 27, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : ஒருவேளை உணவுக்கு தவிக்கும் மக்கள் ஒருபுறம் என்றால், தினமும், ஓட்டல்களில் மீதமாகும் உணவு, குப்பையில் கொட்டப்படுகிறது. உணவுப் பொருட்களை வீணாக்காமல், ஆதரவற்ற மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, தன்னார்வ அமைப்பினரை ஒன்றிணைத்து, உணவக உரிமையாளர்கள் செயல்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'சமீப காலமாக திருமண மண்டபங்களில் வீணாகும் உணவை, ஆதரவற்றோர் காப்பகத்துக்கு வழங்குகின்றனர். அதேபோன்று, ஓட்டல்களில் மீதமாகும் உணவுகளை பொட்டலமாக்கி, தன்னார்வ அமைப்பு வாயிலாக ஆதரவற்ற மக்களை வழங்க வேண்டும்,' என்றனர்.