/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோசாலைக்கு ஒரு லாரி வைக்கோல் வழங்கல்
/
கோசாலைக்கு ஒரு லாரி வைக்கோல் வழங்கல்
ADDED : மே 16, 2024 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் காரமடை அருகே மாதப்பனூரில், ஸ்ரீ பகவத் இராமனுஜர் கோ ரக்ஷண சாலா என்னும் கோசாலை உள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, பராமரிக்க முடியாத, பசுக்கள், காளைகள், கன்றுகள் இலவசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன் பராமரிப்பாளர்கள், பாலசுப்பிரமணியம், சடகோப இராமனுஜ தாசன் ஆவர். இதனிடையே, மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 55 ஆயிரம் மதிப்பில் ஒரு லாரி வைக்கோல் தீவனங்களை தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் மகேஷ்சந்தர், பொருளாளர் ஸ்டீபன் ஆகியோரது தலைமையில் கோசாலைக்கு வழங்கப்பட்டது.
பசுக்களுக்கு தேவையான கொட்டகை, தண்ணீர் தொட்டிகளை ரோட்டேரியன் மதன்குமார் அமைத்து தந்துள்ளார்.

