/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுண்ணுாட்டம் தயாரித்தல் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
/
நுண்ணுாட்டம் தயாரித்தல் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
நுண்ணுாட்டம் தயாரித்தல் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
நுண்ணுாட்டம் தயாரித்தல் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ADDED : மே 09, 2024 04:12 AM
உடுமலை : மண் வளத்தை பெருக்க, நுண்ணுாட்ட சத்து அவசியம் என வேளாண் பயிற்சி முகாம் நடந்தது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சாகுபடி முறைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் கல்லுாரி மாணவர்கள், இப்பகுதிகளில் தங்கி பல்வேறு களப்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அவ்வகையில், உடுமலை பகுதிகளில், தேனி வேளாண் தொழில் நுட்ப கல்லுாரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அம்மாபட்டியிலுள்ள விவசாயி குணராஜ் தாமோதரன் தோட்டத்தில், தென்னை மற்றும் பயிர்களுக்கு நுண்ணுாட்டச்சத்து இடுவதன் அவசியம் மற்றும் அவற்றால் ஏற்படும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் ஆகியவற்றை பொருத்தமான விகிதத்தில் கலந்து, தென்னை நுண்ணுாட்டம் இடுவது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
விவசாயிகளும், தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.