/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் திட்டங்கள் குறித்து துணை இயக்குனர் ஆய்வு
/
வேளாண் திட்டங்கள் குறித்து துணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஜூலை 06, 2024 02:28 AM
கிணத்துக்கடவு, ஜூலை 5-
கிணத்துக்கடவு, காட்டம்பட்டியில் வேளாண் துறை அதிகாரிகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், வேளாண் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, கோவை மாவட்ட துணை வேளாண் இயக்குனர் (மாநில திட்டம்) விஜய் கல்பனா காட்டம்பட்டி கிராமத்தில் ஆய்வு செய்தார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டப்பணிகள் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தகுமார் மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம், உதவி வேளாண் அலுவலர்கள் மணி, முத்து, லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நிலங்களில் புதர் அகற்றுதல் மற்றும் உழவு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் வாயிலாக கோடை உழவு பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.