/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு
/
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு
ADDED : ஏப் 29, 2024 02:07 AM
தொண்டாமுத்தூர்;கோவை மாவட்டம் பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருவள்ளுவர் மாவட்டம், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி,46, சாமியானா பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். சிவ பக்தரான இவர், சொந்தமாக கோவில் கட்டி பூஜையும் செய்து வருகிறார்.
புண்ணியகோடி நேற்று தனது நண்பர்கள் 10 பேருடன், பூண்டிக்கு வந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க, மலை ஏறிக் கொண்டிருந்தார். முதல் மலையில் ஏறி கொண்டிருக்கும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. டோலி தூாக்கும் தொழிலாளிகளின் உதவியுடன், அவர் கீழே அழைத்து வரப்பட்டார்.
108 ஆம்புலன்ஸ் மூலம், பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதோடு, இந்தாண்டு மட்டும் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒன்பது ஆக உயர்ந்துள்ளது.

