/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓலையக்கா நோன்பு பக்தர்கள் பங்கேற்பு
/
ஓலையக்கா நோன்பு பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 16, 2024 08:22 PM
அன்னூர்;செட்டிபாளையத்தில், அம்மன் கோவிலில், பிரசித்தி பெற்ற ஓலையக்கா நோன்பு நேற்று நடந்தது.
கர்நாடகாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு, கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பக்தர்கள் சிலர், தங்களது குலதெய்வமான உருகாதேஸ்வரி அம்மனை எடுத்து வந்து, அன்னூர் அருகே செட்டிபாளையத்தில் நிறுவினர். அப்போது எதிரிகளிடமிருந்து தப்பிக்க, ஓலையக்கா தீ வைத்துக்கொண்டு இறந்ததாக ஐதீகம்.
ஒவ்வொரு ஆண்டும், அம்மன் கோவிலில் ஒலையக்கா நோன்பு நடைபெறுகிறது. செட்டிபாளையத்தில் உள்ள உம்மத்தூர் உருகாதேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று காலை பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக பூஜையும், ஓலையக்கா விநியோகமும் நடந்தது.
ஓலையக்காவை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மதியம் அம்மனுக்கு, அலங்கார பூஜை நடந்தது.
ஓலையக்கா பாட்டு பாடி, கும்மி அடிக்கப்பட்டது. இதையடுத்து, ஓலையக்கா அக்னி குண்டத்தில் இறக்கப்பட்டது. கோவில் அறங்காவலர் லோகநாதன் உட்பட, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

