/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஐ.ஓ.பி., அணிக்கு டெக்ஸ்மோ கோப்பை
/
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஐ.ஓ.பி., அணிக்கு டெக்ஸ்மோ கோப்பை
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஐ.ஓ.பி., அணிக்கு டெக்ஸ்மோ கோப்பை
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஐ.ஓ.பி., அணிக்கு டெக்ஸ்மோ கோப்பை
ADDED : மே 28, 2024 01:03 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த டெக்ஸ்மோ கோப்பைக்கான, மாநில அளவிலான வாலிபால் போட்டியில், ஐ.ஓ.பி., அணி வெற்றி பெற்றது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில், டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் கடந்த, 22ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடந்தன.
இதில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழக காவல்துறை, அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கஸ்டம்ஸ் அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' முறையில் நடந்தன.
இறுதிப் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, இந்தியன் வங்கி அணியை, 3:2 என்ற செட் கணக்கில் வென்று, முதல் இடம் பிடித்து, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கோப்பையை கைப்பற்றியது.
இரண்டாம் இடம் பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு, 45 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் மணிக்கு, 40 ஆயிரம், 4ம் இடம் பெற்ற கஸ்டம்ஸ் அணிக்கு, 35 ஆயிரம், 5ம் இடம் பெற்ற தமிழ்நாடு காவல்துறை அணிக்கு, 30 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
அக்வா டெக்ஸ் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடத்தை தடாகம் வாலிபால் கிளப் அணி, இரண்டாம் இடத்தை கோட்டூர் சாந்தி வாலிபால் அணி, மூன்றாம் இடத்தை மேற்கு மண்டல காவல்துறை அணி, நான்காம் இடத்தை உஜ்ஜையனூர் மோகன்ராஜ் மெமோரியல் வாலிபால் அணியும் வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, அக்வா குரூப் நிர்வாக இயக்குனர் குமாரவேலு, பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.