/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொழுது போக்கு அம்சங்கள் இயக்குவதில் சிக்கல்; நகராட்சி கடிதத்தால் மக்கள் அதிர்ச்சி
/
பொழுது போக்கு அம்சங்கள் இயக்குவதில் சிக்கல்; நகராட்சி கடிதத்தால் மக்கள் அதிர்ச்சி
பொழுது போக்கு அம்சங்கள் இயக்குவதில் சிக்கல்; நகராட்சி கடிதத்தால் மக்கள் அதிர்ச்சி
பொழுது போக்கு அம்சங்கள் இயக்குவதில் சிக்கல்; நகராட்சி கடிதத்தால் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஏப் 23, 2024 10:14 PM
உடுமலை : மாரியம்மன் தேர்த்திருவிழாவிற்காக, பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டைத்திடலில், பிரமாண்ட ராட்டிணங்கள், கப்பல், சீசா, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், திருவிழா கடைகள் அமைக்கப்படும். தேர்த்திருவிழாவில் முக்கிய அம்சமாக இருக்கும், பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க நடப்பாண்டும், வருவாய்த்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு, ரூ.98.30 லட்சம் ரூபாய் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குட்டைத்திடலில் பொழுது போக்கு அம்சங்கள், திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகராட்சி சார்பில், ஒரு சில கவுன்சிலர்கள் கோரிக்கை என்ற அடிப்படையில் மண் வளப்பரிசோதனை செய்ய வேண்டும், உறுதித்தன்மை ஆய்வு செய்ய வேண்டும், என தாசில்தாருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொழுது போக்கு அம்சங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுக்கும் மேலாக, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், நகராட்சிக்கு சம்பந்தமே இல்லாமல், மண் வளம் திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் மனு அளித்துள்ளதாக, பொது மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ராட்டிணங்கள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் போது, பொதுப்பணித்துறை உறுதிச்சான்று, தீயணைப்புத்துறை, போலீசார் என அரசு துறைகளில் சான்று பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுகிறது,' என்றனர்.

