ADDED : ஏப் 02, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆபிசர்ஸ் கிளப்பில் நேற்று முன்தினம் இரவு, விருந்து அளிக்கப்பட்டது.
பார்வையாளர்களுடன், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.

