ADDED : ஜூன் 26, 2024 10:51 PM

கோவை : கோவை மாநகர போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கபடி போட்டி, புரோஜோன் மாலில் நேற்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் சார்பில், சர்வதேச போதைப்பொருள் துன்புறுத்தல் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டது.
இதன் முதல் கட்டப்போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கபடி மைதானத்திலும், அடுத்த கட்ட போட்டிகள், சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலிலும் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில் 64 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றன.
இதன் பெண்கள் பிரிவு அரையிறுதிப்போட்டியில், வளர்பிறை கபடி அணி 42 - 28 என்ற புள்ளிக்கணக்கில் சூலுார் அணியையும், பயனீர் அணி 27 - 26 என்ற புள்ளிக்கணக்கில், ரத்தினம் கல்லுாரி அணியையும் வீழ்த்தின.
ஆண்கள் பிரிவு காலிறுதிப்போட்டியில், தினா நினைவு கபடி அணி 22 - 16 என்ற புள்ளிக்கணக்கில் ஏ.எஸ்.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும், 4ம் பட்டாலியன் அணி 22 - 18 என்ற புள்ளிக்கணக்கில் சிவகாமி ஸ்போர்ட்ஸ் அணியையும், ஏ.ஆர். சிட்டி போலீஸ் அணி 26 - 22 என்ற புள்ளிக்கணக்கில் பேரூர் லைப் ஸ்போர்ட்ஸ் அணியையும் வீழ்த்தின.