/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட விளையாட்டு; சி.ஆர்.ஆர்., சிறப்பு
/
மாவட்ட விளையாட்டு; சி.ஆர்.ஆர்., சிறப்பு
ADDED : ஆக 01, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், சி.ஆர்.ஆர்., பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி, வெற்றி வாகை சூடினர்.
டி.என்.ஜி.ஆர்., பள்ளி விளையாட்டு குழு சார்பில் நடந்த, மாவட்ட அளவிலான கோ-கோ மற்றும் வாலிபால் ஜூனியர் பிரிவில், சி.ஆர்.ஆர்., பள்ளி மாணவர்கள் மூன்றாமிடம் பிடித்தனர்.
இதேபோல், கோவை மாவட்ட கோ-கோ சங்கம் சார்பில் நடந்த, கோ-கோ போட்டியின் ஜூனியர் பிரிவில் இரண்டாமிடமும், சப் - ஜூனியர் பிரிவில் மூன்றாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடேசன், செயலாளர் ஜெயசாந்தா, முதல்வர் பாப்பு, உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.