/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைநிகழ்ச்சியுடன் தி.மு.க., பிரசாரம்
/
கலைநிகழ்ச்சியுடன் தி.மு.க., பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவுக்கு உட்பட்ட கிராமங்களில், தி.மு.க.,வை ஆதரித்து கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பிரசாரம் நடந்தது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்களில், முருக பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில், நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான, மயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் ஆடி மக்களிடையே ஓட்டு சேகரித்தனர்.
பிரசாரத்தின் போது, தி.மு.க., அரசின் சாதனைகள், அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர், கோவில் நிலங்கள் மீட்பு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை போன்றவைகள் குறித்து தெரிவித்து, ஓட்டு சேகரித்தனர்.

