/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு கேட்க தி.மு.க.,விற்கு அருகதை இல்லை: வேலுமணி
/
ஓட்டு கேட்க தி.மு.க.,விற்கு அருகதை இல்லை: வேலுமணி
ADDED : மார் 27, 2024 12:00 AM
போத்தனூர்:ஈச்சனாரி அடுத்து பை-பாஸ் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க, வேட்பாளர் கார்த்திக், அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
அ.தி.மு. க., -- தி.மு.க., இடையேதான் போட்டி. 3.5 - 4 சதவீதம் அதிகபட்சம் ஆறு சதவீத ஓட்டுகள் வாங்கும் பா.ஜ., போட்டியிலேயே கிடையாது. மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்தியது நாம் தான்.
தி.மு.க., கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எதுவுமே செயல்படுத்தப் படவில்லை. அவர்களுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க அருகதையே கிடையாது. கோவை நமது கோட்டை என்பதை நிரூபிப்போம். 2026-ல் மீண்டும் பழனிசாமி முதல்வர் ஆவார்; மாவட்டத்திற்கு தேவையானதை நாம் செய்வோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், ஜெயராம், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, போத்தனூர் பகுதி கழக செயலாளர் ரபீக் மற்றும் மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா உட்பட, திரளானோர் பங்கேற்றனர்.

