/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா
/
தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா
தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா
தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா
ADDED : மார் 29, 2024 12:23 AM
அன்னூர்;தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வினரும், பூத் கமிட்டிக்கு நேற்று பணப்பட்டுவாடா செய்தனர்.
நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில், மத்திய இணை அமைச்சர் முருகன், தி.மு.க., சார்பில் தற்போதைய எம்.பி., ராஜா, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் தி.மு.க., நிர்வாகிகள், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள தி.மு.க., ஓட்டு சாவடி கமிட்டிகளுக்கு ஊராட்சியை பொறுத்து 13 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கினர்.
இதையடுத்து நேற்று அ.தி.மு.க.,வினர் பூத் கமிட்டிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் முதல் பெரிய ஊராட்சிகளுக்கு கூடுதலாகவும் வழங்கினர். 29ம் தேதி செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்கவும், சுவர்களில் சின்னம் வரையவும், தினசரி பிரசாரத்திற்கு செல்லவும், இந்த தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். பண பட்டுவாடாவால் அ.தி.மு.க., பூத் கமிட்டியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

