/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மாதிரி தேர்வு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மாதிரி தேர்வு
ADDED : மே 16, 2024 10:41 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நாளை (18ம் தேதி) குரூப் 4 க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி தேர்வு, நாளை (18ம் தேதி) நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் மணி நகரில் அமைந்துள்ள, நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையம் வளாகத்தில், காலை,11:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இத்தேர்வானது, தேர்வலர்களின் தயார் நிலை அறிந்து கொள்ள ஏதுவாகவும், அடுத்து வரும் அரசு தேர்விற்கு ஒரு முன்னோடியாகவும் அமையும். இம்மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்களது சுய விபரங்களான, பெயர், முகவரி, மொபைல் எண், கல்வி தகுதி, ஆகியவற்றை நேரிலோ அல்லது வாட்ஸ் அப் (9080482073) எண்ணிலோ, மின்னஞ்சல் (library24mtp@gmail.com) வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யும் நபர்களுக்கு, முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பு, புரிதலுக்காக மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை, தவறாமல் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிக்கையில் கூறியுள்ளார்.

