/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் குப்பை சேகரிக்க மின்சார வாகனம் கொடை
/
அரசு மருத்துவமனையில் குப்பை சேகரிக்க மின்சார வாகனம் கொடை
அரசு மருத்துவமனையில் குப்பை சேகரிக்க மின்சார வாகனம் கொடை
அரசு மருத்துவமனையில் குப்பை சேகரிக்க மின்சார வாகனம் கொடை
ADDED : பிப் 24, 2025 11:35 PM
கோவை, ; கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், வார்டுகளில் உள்ள குப்பையை எளிதாக எடுத்துச்செல்லும் வகையில் சிறிய அளவிலான வாகனம், ஜி.டி., நாயுடு அறக்கட்டளை சார்பில், நேற்று வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் குப்பை அதிகளவில் சேர்கிறது. மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையும் உள்ள சூழலில், குப்பையை எடுத்து செல்வது சிரமமாக இருந்தது. இதனால், பணியாளர்கள், நோயாளிகளுக்கானவீல் சேர், ஸ்ட்ரெக்ச்சர் ஆகியவற்றில் குப்பை எடுத்து செல்வதாக புகார் எழுந்தது.
மருத்துவமனை நிர்வாகத்தால் தன்னார்வலர்களிடம் உதவி கோரப்பட்டது.
ஜி.டி., நாயுடு அறக்கட்டளை சார்பில் மின்சாரத்தில் இயங்கும், 2.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று சக்கர சிறிய வாகனம், நேற்று நன்கொடையாக அளிக்கப்பட்டது.
இவ்வாகனம், எளிதாக சென்று குப்பை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.