/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அனைத்து வார்டுகளிலும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்'
/
'அனைத்து வார்டுகளிலும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்'
'அனைத்து வார்டுகளிலும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்'
'அனைத்து வார்டுகளிலும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்'
ADDED : ஜூன் 14, 2024 12:27 AM
கோவை : அனைத்து வார்டுகளிலும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
தற்போது அணைகளின் நீர் இருப்பு நல்ல நிலையில் உள்ளது. தினமும், அணைகள், குடிநீர் திட்டங்கள் வாயிலாக, 260 எம்.எல்.டி., குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அணைகளில் உள்ள மண்ணை வெட்டி எடுத்து அதில் உள்ள நீர் வெளியேறும் வரை குறிப்பிட்ட பகுதியில் கொட்டி அதன் பின் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி தொகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது மழை பொழிவு, மற்றும் அணைகள் தூர்வாரப்பட்டதால், குடிநீர் வினியோகம் சீரடைந்துள்ளது. தெற்கு மண்டல பகுதியில் ஏழு வார்டுகளில் தற்போது இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், 25 வார்டுகளில் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒரு முறையும், 75 வார்டுகளில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. அனைத்து வார்டுகளிலும், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை தொடர்ந்து பெய்தால், இந்நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.