/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைத்திறனுக்கு களம் அமைத்த 'இ -- போனி'
/
கலைத்திறனுக்கு களம் அமைத்த 'இ -- போனி'
ADDED : மார் 13, 2025 05:55 AM
கோவை; சூலுார், ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக, 'இ-போனி' என்ற நிகழ்வை நடத்தி வருகிறது.
நாடப்பாண்டு நிகழ்வில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த பாடகி கெரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் பாடல்கள் பாடி, மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்வுகளை அரங்கேற்றினர். ஆறுபடை, கரகாட்டம், ஒயில், பறை துாரிகையின் கனா, ரெட்ரோ, நாடகம் போன்ற சிறப்பு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்திய ராணுவத்தினருக்கு அர்ப்பணிக்கும் வகையில், 'அநீதி' எனும் கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. நிகழ்வின் இறுதியில், இஸ்ரேல் பாடகி கெரன், வந்தேமாதரம் பாடல் பாடி சிறப்பித்தார். கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், தாளாளர், செயலர், முதல்வர், துணை முதல்வர், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.